2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

உரமானியம் வழங்கப்படாமையால் நூரளை விவசாயிகள் பாதிப்பு

Editorial   / 2018 பெப்ரவரி 18 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா மாவட்ட விவசாயிகளுக்கு, அரசாங்கத்தால் உரமானியம் வழங்கப்படமையால், மாவட்ட விவசாயிகள் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாகக் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் நிலவிய கடும் பனி மற்றும் வரட்சியான வானிலை காரணமாக பல தேயிலைத் தோட்டங்களின் விளைச்சல்கள் வெகுவாகப்  பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால், போதியளவு சம்பளம் கிடைக்கவில்லை என்று கவலை தெரிவிக்கும் தொழிலாளர்கள், தேயிலை விளைச்சல் குறைவடைந்துள்ளதால் வேலை நாட்களும் குறைவடைந்துள்ளதாகக் கவலைத் தெரிவிக்கின்றனர்.

தேயிலைத் தோட்டங்கள் காடாகியுள்ளமையாலும் சம்பளம் குறைவு என்ற காரணத்தாலும் பெருமளவான தோட்டத் தொழிலாளர்கள், மரக்கறி செய்கையை நாடியுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தின் அக்கரப்பத்தனை, டயகம, எல்ஜின், கவுலினா, அகரக்கந்ததை, மெரயா, பசுமலை ஆகிய பகுதிகளில் சுமார் 1,500க்கும் மேற்பட்டவர்கள், மரக்கறி செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

உரமானியம் வழங்கப்படாமையால், தாம் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் மரக்கறி செய்கையை மேற்கொண்டுவருவதாக சுட்டிக்காட்டும் அவர்கள், நிர்ணய விலை இல்லாத காரணத்தால், தமது உற்பத்திகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்றும் கவலை தெரிவித்தனர்.

பொருளாதார ரீதியில் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள தமக்கு, மானியங்களை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும் என, நுவரெலியா மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .