2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

உருளைக்கிழங்கு விவகாரம்:

Editorial   / 2018 பெப்ரவரி 22 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியாவிலுள்ள விவசாயிகளின் உயிரைப் பாதுகாப்பதற்கு, அரசாங்கமும் நிதி அமைச்சும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வீ. இராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நிதியமைச்சருக்கு, தொலைநகல் மூலம், நேற்று (22) அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே, அவர் மேற்குறிப்பிட்டுள்ள வேண்டுகோளை விடுத்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், சிரமத்துக்கு மத்தியிலேயே விவசாயத்தைக் கொண்டு நடத்துகின்றனர். உருளைக்கிழக்கு அறுவடை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, உருளைக்கிழங்குகளை அரசாங்கம் இறக்குமதி செய்வதன் காரணத்தாலும், இறக்குமதி வரி குறைக்கப்பட்டதன் காரணத்தினாலும், தங்களால் அறுவடை செய்யப்பட்ட கிழங்குகளை, உரிய விலையில் விற்க முடியாமல், விவசாயிகள் திண்டாடுகின்றனர்" என்று, தனது கடிதத்தில், இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் அநேகமானவர்கள், விவசாயத்தை மாத்திரமே வருமானமாகக் கொண்டுள்ள நிலையில், இவ்வாறான நிலை தொடருமாயின், விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை, மழுமையாக இழந்துவிடவேண்டிய நிலை ஏற்படும் என, இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, விவசாயிகளைப் பாதுகாக்கும் பொருட்டு, உருளைக்கிழக்கு இறக்குமதி நடவடிக்கையை, அரசாங்கம் நிறுத்தவேண்டும். அத்தோடு, உருளைக்கிழக்கு இறக்குமதிக்கான வரியை அதிகரிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்என்று அக்கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (20) கலந்துரையாடலொன்று இடம்பெற்றது எனவும், இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .