2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

ஊரடங்கு காலத்திலும் சட்டவிரோத மதுபான விற்பனை

Editorial   / 2020 ஏப்ரல் 05 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சுஜிதா

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாடளாவிய ரீதியில் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள உப நகரங்களில், சட்டவிரோத மதுபான விற்பனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

உபநகரங்களிலுள்ள மதுபானசாலைகளில், மிகவும் சூட்சுமுமான முறையில் மதுபான விற்பனை முன்னெடுக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

பொதுமக்களால் வழங்கப்படும் தகவலுக்கு அமைய, மதுபானம் விற்பனை செய்வோரை, பொலிஸாரும் இராணுவத்தினரும் கைதுசெய்யச் செல்லும்போது, பொலிஸார் வருவதை அறிந்து உரிமையாளர்கள் தலைமறைவாகி விடுவதாகவும் இதனால் சம்பந்தப்பட்டோரை கைதுசெய்ய முடியாத நிலை ஏ ற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே பெருந்தோட்டப் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத மதுபான விற்பனைக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .