2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஊரடங்கை மீறி மரக்கறி விற்பனையில் ஈடுபட்ட இருவர் எச்சரித்து விடுவிப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 07 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ், பி.சிவா.

ஊரடங்குச்சட்டத்தை மீறி நாவலப்பிட்டி நகரில், மரக்கறி வியாபாரத்தில் ஈடுப்பட்ட கொத்மலை அப்புகஸ்தலாவை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர்களை, நாவலப்பிட்டி பொலிஸார் எச்சரித்து விடுவித்துள்ளனர். 

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்தக்குச் செல்வதற்குத் தடைவிதிக்கப்பட்ட நிலையில், நுவரெலியா, கொத்மலை அப்புகஸ்தலாவை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர், கண்டி, நாவலப்பிட்டி பகுதிக்குச் சென்று வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவர் தனக்குச் சொந்தமான வாகனம் ஒன்றில், மரக்கறிகளைக் கொன்று சென்று நாவலப்பிட்டி நகரில் வியாபாரம் செய்துள்ளார்.

அத்தியாவசியத் சேவைக்குறிய அனுமதியை தனது வாகனத்துக்குப் பெற்றுள்ள அவர், மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தை மீறி   வியாபாரத்தில் ஈடுப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி நபரை விசாரணைக்கு உட்படுத்திய பொலிஸார், பின்னர் எச்சரித்து விடுவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .