2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘ஊழலற்ற அரசாங்கத்தை உருவாக்க ஜனாதிபதியுடன் இணைந்துள்ளோம்’

Editorial   / 2019 மார்ச் 05 , மு.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், பி.கேதீஸ் 

ஊழலற்ற அரசாங்கமொன்றை உருவாக்கமொன்றை உருவாக்குவதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஒன்றிணைந்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு ஒரு சக்தியாக, மலையக மக்கள் துணை வரவேண்டும் என, மத்திய மாகாண முன்னாள் தமிழ் கல்வி அமைச்சர் எம்.ரமேஷ்வரன் தெரிவித்தார். 

கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட வட்டகொடை, யொக்ஸ்போர்ட் தோட்டத்துக்கான கலாசார மண்டபம், நேற்று முன்தினம் (03) மாலை, மத்திய மாகாண முன்னாள் தமிழ் கல்வியமைச்சர் எம். ரமேஷ்வரன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.  

இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார். 

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,  

இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு அங்கிகாரம் இல்லை, பதவியில்லை என்று பலர் கூறுகின்றனர் என்று கூறிய அவர், ஆனால், இ.தொ.க பல அபவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதாகக் கூறினார்.  

வாக்களிக்கும் உரிமை கொண்டுள்ள பொதுமக்கள், வாக்களிக்கும் போது, சிந்தித்து வாக்களிக்கவேண்டும் என்று கூறிய அவர், 2015ஆம் ஆண்டு சிந்திக்காமல் வாக்களித்ததாலேயே, இன்று வரை, நாட்டு மக்கள் போராட்டத்துக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.    

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .