2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

’ஊழலற்ற அரசாங்கத்தை உருவாக்க ஜே.வி.பி தயாராகிறது’

Editorial   / 2018 ஒக்டோபர் 08 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ரமேஸ்

நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் கூடியவர்களாக, கிராம மக்களும் தோட்ட மக்களுமே உள்ளனரென்றுத் தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க, இவர்கள் மத்தியில் கொள்கைகளைப் பறப்பி, நாட்டின் இன்றைய நிலைமையை முன்னேற்றும் மக்கள் சந்திப்புகளை நடத்தி வருவதாகவும் கூறினார்.

இவ்விருசாராரின் பலத்துடன், எதிர்வரும் ஜனவரி மாதம் முதல், ஊழலற்ற அரசாங்கத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க, ஜே.வி.பி தயாராகி வருவதாகவும், அவர் தெரிவித்தார்.

“நாட்டைப் பாதுகாக்கும் நாட்டைக் கட்டியெழுப்பும் மக்கள் நேயமிகு ஆட்சி” என்ற தொனிப்பொருளில், நுவரெலியா மாநகர மண்டபத்தில், நேற்று முன்தினம் (07) நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், மக்கள் விடுதலை முன்னணிக்கு, புத்திஜீவிகளின் ஆதரவு பறந்தளவில் காணப்படுவதாகவும் எதிர்காலத்தில், மக்கள் நேசிக்கக்கூடிய நாடாக இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான நம்பிக்கை பிறந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த காலங்களில், மாறி மாறி ஆட்சிபீடமேறிய இரு பிரதான கட்சிகளும், நாட்டை அதல பதாளத்தக்குள் தள்ளிவிட்டதாகக் குற்றஞ்சாட்டிய திசாநாயக்க, புதிய அமைச்சரவையுடன் அரசாங்கத்தைப் பொறுப்பேற்கும் அங்கிகாரம் வலுபெற்று வருவதாகவும் நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நம்பிக்கை பிறத்துள்ளதாகவும் கூறினார்.

அத்துடன், நாட்டின் பொருளாதாரத்தில் முதுகெழும்பாகத் திகலும் பொருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையைப் பாதுகாப்பதற்கும், ஜே.வி.பியினர் முன்னின்றுச் செயற்படவுள்ளதாகவும், அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .