2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘ஊழலில் ஈடுபட்ட அரச நிறுவனத் தலைவர்கள் பதவி நீக்கம்’

செ.தி.பெருமாள்   / 2019 மார்ச் 11 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மாகாண சபைக்குட்பட்ட அனைத்து நிறுவனங்களிலும், அதிகளவு ஊழலும் முறையற்ற செயற்பாடுகளும் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது எனத் தெரிவித்துள்ள மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரட்ன, அவ்வாறு மோசடியில் ஈடுபட்டுள்ள அரச நிறுவனங்களின் தலைவர்களைப் பதவியிலிருந்து நீக்குமாறு கட்டளையிட்டுள்ளதாகக் கூறினார்.  

இராகலையிலுள்ள அரச நிறுவனங்களை, நேற்று முன்தினம் (09) பார்வையிட்ட பின்னர், ஊடகவியலாளர்களிடம் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,  

மத்திய மாகாண சபைக்குட்பட்ட சகல அரச நிறுவனங்களிலுள்ள பலர், தங்களது கடமையை ஒழுங்காகச் செய்யாது, அசமந்தப் போக்குடன் செயற்பட்டு வருவதாகவும் இவர்கள், அரச சொத்துகளை மோசடி செய்து, மக்களுக்கான சேவையை ஒழுங்காக வழங்காமல் இருப்பதால், அவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் கூறினார்.  

ராகல பஸ் தரிப்பிடத்தில், கடந்த 17 ஆண்டுகளாகக் காணப்படும் கடைத்தொகுதிகளுக்கான பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளமை, இதற்கு சிறந்த உதாரணம் என்று அவர் கூறினார்.  

இப்பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்கக் கூடிய வழிமுறைகள் இருந்தும், இது இதுவரையில் செய்யாமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .