2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஊவா சபை அமர்வில் சலசலப்பு

Editorial   / 2018 ஓகஸ்ட் 10 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா   

இருவேறு காரணங்களுக்காக, ஊவா மாகாண சபை அமர்வில் நேற்று (9) சலசலப்பு ஏற்பட்டதால், சபை அமர்வு அரை மணித்தியாலம் ஒத்திவைக்கப்பட்டது.  

தமிழ்மொழி புறக்கணிப்பு மற்றும் கடந்த சபை அமர்வில் ஆளும் தரப்பிலிருந்து எதிர்க்கட்சி வரிசையில் சுயேட்சைக் குழுவாக இருந்தவர்களில் சிலர், மீளவும் ஆளும் தரப்புக்கு மாறியமை தொடர்பாக ஏற்பட்ட காரசாரமான விவாதங்கள் காரணமாகவே, சபையமர்வு, நேற்று (9) ஒத்திவைக்கப்பட்டது.

தமிழ்மொழி புறக்கணிப்பு மற்றும் கடந்த சபை அமர்வில் ஆளும் தரப்பிலிருந்து எதிர்க்கட்சி வரிசையில் சுயேட்சைக் குழுவாக இருந்தவர்களில் சிலர், மீளவும் ஆளும் தரப்புக்கு மாறியமை தொடர்பாக ஏற்பட்ட காரசாரமான விவாதங்கள் காரணமாகவே, சபையமர்வு, நேற்று (9) ஒத்திவைக்கப்பட்டது.

ஊவா மாகாண சபையின் மாதாந்த அமர்வு, சபைத் தலைவர் ஏ.எம்.புத்ததாச தலைமையில், நேற்று (9) காலை 10.30 மணிக்கு ஆரம்பமானது.

இதன்போது, ஊவா மாகாண சபையின் கணக்காய்வு அறிக்கை, சபையின் சகல உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டது.

இந்தக் கணக்காய்வு அறிக்கை முற்று முழுதுமாக தனிச்சிங்கள மொழியில் அமைந்திருந்தபடியால், அதற்கு தமது பலத்த எதிர்ப்பைத் தெரிவித்து, சபை உறுப்பினர்களான எம்.சச்சிதானந்தன், வே.ருத்திரதீபன் ஆகியோர், கணக்காய்வு அறிக்கைக் கோவைகளை மீளவும் சபைத் தலைவரிடம் ஒப்படைத்தனர்.

இதனால் சபையில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும், கடந்த மாகாண சபை அமர்வின் போது, ஆளும் கட்சியிலிருந்து எதிர்க்கட்சி வரிசையில் சுயேட்சைக் குழுவாக அமர்ந்தவர்களில் சிலர் மீளவும் ஆளும் கட்சியில் இணையப் போவதாக தெரிவித்து, ஊவா மாகாண சபைத் தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தை, தலைவர் சபையமர்வில் வாசித்தமையால், சபையில் மீளவும் குழப்பநிலை ஏற்பட்டது.

இதனையடுத்து, சபைத் தலைவர், அமர்வை அரை மணித்தியாலத்துக்கு, ஒத்திவைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .