2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஊவாவின் பாதீடு நிறைவேற்றப்பட்டது

Editorial   / 2018 டிசெம்பர் 07 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா         

ஊவா மாகாண சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான  வரவு – செலவுத்திட்ட நிதி அறிக்கை, 28 அதிகப்படியான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

வரவு – செலவுத்திட்ட நிதி அறிக்கை குறித்து, கடந்த மூன்று தினங்களாக வாத விவாதங்கள் நடைபெற்று, நேற்று இரவு 8 மணிக்கு வாக்கெடுப்பு இடம்பெற்றது.

மாகாண சபை மண்டபத்தில, சபைத் தலைவர் ஏ.எம்.புத்ததாச தலைமையில் நடைபெற்ற மேற்படி வாக்கெடுப்பில், சபையின் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்கள் 14 பேரின் அமோக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

 வாக்கெடுப்பு இடம்பெறும் முன்பே, சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.எம்.ரட்நாயக்க (ஐ.தே.க.) சபை அமர்வில் எழுந்து, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சபையின் அடுத்தாண்டுக்கான வரவு – செலவுத்திட்ட நிதி அறிக்கைக்கு ஆதரவு தர தீர்மானம் எடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.

சபைத்தலைவர் ஏ.எம்.புத்ததாச வரவு – செலவுத்திட்ட நிதி அறிக்கைக்கு வாக்கெடுப்பு நடத்தப்படல் வேண்டுமென்று கூறி, வாக்கெடுப்புக்கு உத்தரவிட்டார்.

இந்த வாக்கெடுப்பில் வரவு – செலவுத்திட்ட நிதி அறிக்கைக்கு ஆளும் கட்சியினர் 16 பேருடன், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் 14 பேருமாக 30 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.

சபையின் ஜே.வி.பி. உறுப்பினர்கள் இருவர் மட்டும் வரவு – செலவுத்திட்ட நிதி அறிக்கைக்கு எதிராக வாக்களித்தனர். இதன் பிரகாரம் 28 அதிகப்படியான வாக்குகளால், வரவு – செலவுத்திட்ட நிதி அறிக்கை நிறைவேற்றப்பட்டது.

சபைத் தலைவருடன் 34 பேரைக் கொண்ட இம் மாகாண சபையில், ஜானக்க திஸ்ஸ குட்டியாராய்ச்சி என்ற எதிர்க்கட்சி உறுப்பினர் மட்டும், அன்றைய தினம் சபை அமர்வில் கலந்துகொள்ளவில்லை. அவர் விடுமுறையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .