2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஊவாவுக்கு மீண்டும் பெறுமதி சேர் வரி அமுலுக்கு வருகிறது

எம். செல்வராஜா   / 2017 ஒக்டோபர் 17 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊவா மாகாணத்தில் பெறுமதி சேர் வரியைப் பெற்றுக்கொள்ள, உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, மாகாணத்தின் வருமானவரி ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.   

கடந்த 2011ஆம் ஆண்டு தொடக்கம் மேற்படி வரியைப் பெற்றுக்கொள்வது இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இதனை மீண்டும் அமுல்படுத்துமாறு, மாகாண முதலமைச்சர், மாகாண வருமானவரி ஆணையாளரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.   

இவ்வரி பெற்றுக்கொள்ளும் திட்டத்தின் மூலம், ஐந்து இலட்சம் ரூபாய் முதல் முப்பது இலட்சம் ரூபாய் வரையில் ஆதாயம் பெற்றுக்கொள்ளும் சிறுவர்த்தகங்கள், சுயமுயற்சிகளில் தொழில் செய்வோர், மாகாண வருமான வரித் திணைக்களத்துக்கு கட்டாயம் வரி செலுத்த வேண்டும். இதனால், சிறு வர்த்தகர்கள், சுயமுயற்சி தொழில் செய்வோர் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கிய வண்ணமுள்ளனர்.   

நாட்டில் எந்தவொரு மாகாணத்திலும் நடைமுறைப்படுத்தப்படாத இவ்வேலைத்திட்டம், ஊவா மாகாணத்தில் மட்டும் மேற்கொள்ளப்படுவது வண்மையாகக் கண்டிக்கத் தக்கதொன்றாகுமென்று, ஊவா மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.எம்.ரட்னாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X