2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

எண்ணெய்ப் பனைக்கு கேகாலையில் தடை

Editorial   / 2018 ஜூன் 25 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேகாலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் எண்ணெய்ப் பனை (கட்டுபொல்) உற்பத்திக்கு, முற்றாகத்  தடை விதிக்கப்பட்டுள்ளதாக, அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.

இன்று (25) இடம்பெற்ற கேகாலை மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தின் போது, இந்த எண்ணெய்ப் பனை உற்பத்தி விவகாரம் சூடுபிடித்த நிலையிலேயே, அதற்கு முற்றாகத் தடை விதிக்கப்படுவதாக, மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரும் கேகாலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அறிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரையாற்றிய அவர், இந்த எண்ணெய்ப் பனைத் தடைக்குத் தேவையான நீதிமன்ற உத்தரவை, விரைவில் தாம் பெற்றுக்கொள்வதாகக் கூறினார்.

இந்நிலையில், கேகாலை மாவட்டத்திலிருந்து, இந்த எண்ணெய்ப் பனை உற்பத்தியை முற்றாகத் தடை செய்யவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதென, நேற்று இடம்பெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின்போது, ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தப் பயிர்செய்கையை, கேகாலை மாவட்டத்தில் முன்னெடுக்க இடமளிக்கப் போவதில்லை என்று, அமைச்சர் அமைச்சர் இதன்போது உறுதியளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .