2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’எதிர்கால எதிரி மக்களுக்குள்ளேயே உருவாகுவார்’

Editorial   / 2019 ஓகஸ்ட் 16 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

நதீக தயா பண்டார

எதிர்காலத்தில் உருவாகும் எதிரி, யுத்தக்களத்தில் அன்றி, பொதுமக்கள் மத்தியிலிருந்து உருவாகுவார் என, இ​ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில், எதிரிகளால் நாட்டுக்கு ஏற்பாடும் பிரச்சினைகள் தொடர்பாக அதிகளவு ஆராயப்பட்டு வருவதாகவும் அதற்குத் தகுந்தவாறு பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

கண்டியில், நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் ​மேலும் தெரிவிக்கையில்,

ஒருங்கமைக்கப்பட்ட சர்வதேச வலைப்பின்னலுக்குள் செயற்படுத்தப்படும் குழுவொன்று இயங்கும்போது கைதுசெய்வதானது, இன்றல்; நாளை வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும்  இவ்வாறான ஒருங்கமைக்கப்பட்ட வலைப்பின்னலை முற்றாக ஒழித்த நாடு உலகில் எந்தப் பகுதியிலும் இல்லை என்றும் கூறினார்.

நாட்டின் தற்போதைய பாதுகாப்புத் தொடர்பில் அச்சப்படத் தேவையில்லை என்று தெரிவித்த அவர், எமது முழுமையான அதிகாரத்தைப் பயன்படுத்தி, பாதுகாப்பை உறுதிப்படுத்த, இலங்கை இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

அதேபோல், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், மிகவும் குறுகிய காலத்துக்குள் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு, இலங்கை இராணுவம் நடவடிக்கை எடுத்தது என்றுமு் அதன் பின்னர் முன்னெடுக்கப்படும் சோதனைகளின் போது தான் இவ்வாறான கைதுகள் இடம்பெறுகின்றன என்றும் ​அவர் கூறினார்.

கடந்த வருடங்களைப் போலவே, இந்த வருடமும் அதிகளவு உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், எசல பெரஹெரவைப் பார்வையிட வந்துள்ளமையானது இலங்கை பாதுகாப்பு பிரிவுகளுக்கு கிடைத்த வெற்றியாகும் என்று கூறிய அவர்,  ஜனாதிபதியின் அறிவுரைக்கமைய, எசல பெரஹெரவுக்கு வரும் மக்களுக்கு, பூரண பாதுகாப்பை வழங்க இலங்கை இராணுவம், பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினருக்கு இயலுமானதாகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .