2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

எதிர்வரும் தேர்தல்களில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பது ’அரசாங்கத்தின் கடமை’

Editorial   / 2019 மார்ச் 21 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.சங்கீதன்

நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும், 25 சதவீதமான பெண்களின் பங்களிப்பை வழங்குவதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணியின் மகளிர் தின நிகழ்வு, நேற்று (20), ரம்பொடை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்  போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த அரசாங்கம், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்களுக்கு உரிய பதிலை விரைவில் பெற்றுக்கொடுக்க ​வேண்டும் என்றும் அதற்குத் தங்கள் தரப்பு ஒத்துழைப்பை வழங்க, எப்போதும் தயாராகவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படல் வேண்டும் என்றால், இலங்கையில், சர்வதேச ரீதியிலான, பெண்களுக்கென்ற தனியொரு நீதிமன்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதன்போது அங்கு உரையாற்றிய மலையக மக்கள் முன்னணியின் பிரதிச் செயலாளரும் சட்டத்தரணியுமான அனுசா சந்திரசேகரன்,

ஒரு வட்டத்துக்குள் வாழ்ந்து வரும் மலையகப் பெண்கள், அந்த வட்டத்தை உடைத்துக்கொண்டு வெளியே வரவேண்டும் என்று கூறினார்.

ஆண்களுக்கு நிகராக ஒப்பிட்டு பேசிக்கொண்டு, அவர்களுடன் போட்டியிட்டுச் செல்வதல்ல பெண்களின் கடமை என்று கூறிய அவர், பெண்கள், தங்களுக்கான  பொறுப்புகளை எப்போதும் சரிவர நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அத்தோடு, பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்குக் குரல் கொடுக்க, சட்டத்தரணி என்ற வகையில், தான் இருப்பதாகவும் பெண் சமூகத்தின் குரலாக ஒலிப்பதற்குத் தயாராகவுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .