2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’எல்பிட்டி தேர்தல் ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒப்பானது அல்ல’

Editorial   / 2019 ஒக்டோபர் 13 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எஸ்.சதீஸ்

சிறியதொரு தேர்தலான எல்பிட்டி பிரதேச சபைக்கான தேர்தலை, ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பிடமுடியாது என, மத்திய மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.

ஹட்டனில் நேற்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர்  தொடர்ந்நது கருத்துத் தெரிவிக்கையில்,

அனைத்து மாகாணங்களிலும் இடம்பெறும் தேர்தலைப் போ்று, தேசிய ரீதியில் நடைபெறும் தேர்தலைக் கணக்கிட முடியாது என்றும் அவர் கூறினார்.

இம்முறை நடைபெறும் தேர்தலில் வாக்களிக்கும் படித்த இளைஞர்கள், யுவதிகள், நன்றாக சிந்தித்து வாக்களிக்கவேண்டும் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.

மத்திய மாகாணத்திலுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு,
சுதந்திரமாகச் செயற்படுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், அண்மையில், அரசியல் ரீதியாக, தேர்தல் நடவடிக்கைகளுக்கு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக, குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன என்று கூறினார்.

இது குறித்து, அனைத்து அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் எந்த வகையிலும்,  மக்களுடைய சொத்துகளைப் பயன்படுத்துவதைநிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

மாகாணசபைகள் இல்லை என்பதால், அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படாமல் இல்லை என்றும் வழங்கப்பட்டுள்ள நிதிகளுக்கு, ஆளுநர்களின் ஊடகா, அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .