2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

’எஹெலியகொடை மக்களுக்கு சுத்தமான குடிநீர் இல்லை’

Editorial   / 2020 ஜனவரி 22 , பி.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஏ.ஏ.எம்.பாயிஸ்

எ​ஹெலியகொடை நகருக்கு வழங்கப்பட்ட பிசோதொல எல்ல குடிநீர்த்திட்டம், முறையாக பராமரிக்கப்படாமையால், நகரின் மக்கள், குடிநீர்ப் பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதனால், மக்கள் அருத்தமான நீரை அருந்தவேண்டியுள்ளது என்றும் குடிநீருக்கு மாத்திரம் கடும் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

தற்போது நடைமுறையிலுள்ள குடிநீர்த்திட்டம், முறையான சுத்திகரிப்பின்றி காணப்படுவதாகவும் இதனால், இதிலிருந்து சிறியளவு நீர் கூட விநியோகிக்கப்படுவதில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நீர் விநியோகத்திட்டத்தின் பிரதான நீர்க் குழாய்கள், எஹெலியகொடை - தெஹியோவிட்ட வீதிக்கு குறுக்கே போடப்பட்டுள்ளமையால், கனரக வாகனங்களின் போக்குவரத்து காரணமாக, பல இடங்களில் சேதமடைந்துள்ளதாகவும் இதைப் புனரமைப்பதற்காக, பல மில்லியன் ரூபாய் பெருமதியில் இடப்பட்ட கார்ப்பட் வீதியும் உடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, குறித்த பகுதியிலுள்ள மக்களுக்கு குடிநீர் வழங்கும் இந்த நீர் விநி​யோகத் திட்டத்தை,  சரியான முறையில் பராமரித்துத் தருமர்று, பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .