2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’ஐக்கிய தேசிய முன்னணிக்கு அமோக வெற்றி காத்திருக்கிறது’

Editorial   / 2019 செப்டெம்பர் 23 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உமாமகேஸ்வரி

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியுடன், இன, மத வேறுபாடுகள் இன்றி​ அனைவரும் இணைந்துள்ளமையால், நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், ஐக்கிய தேசிய முன்னணி, அமோக வெற்றி பெறும் என்று, தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவலகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்டத்தில், அமைச்சின் பாரிய நிதியொதுக்கீட்டின் கீழ், தோட்டங்கள், கோவில்களில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை, மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு, நேற்று (22) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய முன்னணி சார்பாக, இதுவரைக்கும் வேட்பாளர் நியமிக்கப்படாதமையால், அந்த முன்னணி வெற்றிபெறுமா என்று பலரும் கேட்பதாகக் கூறிய அவர், ஐ.தே.மு சார்பில், எந்த வேட்பாளர் வந்தாலும் வெற்றிபெறுவார் என்றும் கூறினார்.

யார் வேட்பாளர் என்பது முக்கியமல்ல என்றும் ஆனால், இன, மத பேதமற்ற ​ஆதரவே முக்கியம் என்பதால், வெற்றி நிச்சயம் என்றும் கூறினார்.

2015ஆம் ஆண்டுக்குப் பின்னர், வெள்ளை வான் கலாசாரம் இல்லாதொழிக்கப்பட்டது என்றும் இதனால், வடக்கு மக்கள் மட்டுமல்ல, கிழக்கு மக்களும்  எம்முடன் இருப்பதனால், ஜனாதிபதி தேர்தலில் வெற்றி நிச்சயம் என்று கூறினார்.

எது எப்படியாக இருந்தாலும், நவம்பர் மாதம் 17ஆம் திகதி, புதிய அரசாங்கம் பதவியேற்று, முழுமையான ஐ.தே.மு அரசாங்கம் மலரும் என்று கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .