2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஐந்து வருடத்தில் 32 சிறுத்தைகள் இறப்பு

Editorial   / 2019 மே 20 , பி.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள் 

கடந்து ஐந்து ஆண்டுக் காலப்பகுதியில், மலையகப் பகுதிகளில் மாத்திரம், 32 சிறுத்தைகள் இறந்துள்ளன என்று, மத்திய மாகாண வனத்துறையின் வனவிலங்குப் பாதுகாப்பு அதிகாரி டி.எம்.வீரசிங்க தெரிவித்தார். 

ஹக்கல, நல்லதண்ணி, கீர்த்திபண்டாரபுர, பெலிஹல்-ஓயா, ஹோட்டன்தென்ன மற்றும் தேசிய வனப் பரிபாலனப் பகுதியிலேயே, இவ்வாறு சிறுத்தைகள் இறந்துள்ளன என்றும் தெரிவித்தார்.  

2015ஆம் ஆண்டில் 10 சிறுத்தைகளும் 2016இல் 4 சிறுத்தைகளும் 2017ஆம் ஆண்டில் 6 சிறுத்தைகளும், 2018ஆம் ஆண்டில் 7 சிறுத்தைகளும் இறந்துள்ளன என்று அவர் கூறினார்.  

ஐந்து ஆண்டுகளுக்குள், ஹக்கல பகுதியிலேயே அதிகளவான 17 சிறுத்தைகள், விஷ உணவு உட்கொண்டமையாலும் வலைகளில் சிக்கியும் உயிரிழந்துள்ளன என்று அவர் கூறினார்.  

மேலதிக வருமானத்துக்காக, தோட்டத் தொழிலாளர்கள், காட்டு மிருகங்களை இலகுவாக வேட்டையாட முடிந்தமையால், சிறுத்தைகள் வனப்பகுதியிலிருந்து கிராமப் பகுதிக்கு வருகை தருவதாகவும் அப்போது குடிமக்கள், தத்தமது வளர்ப்புப் பிராணிகளைப் பாதுகாக்கும் நோக்கிலேயே, இவ்வாறு வலை வைத்தல், விஷயம் வைத்தல் போன்ற உபாயங்களைக் கையாண்டு, வலையில் சிக்கும் சிறுத்தைகளின் கால் நகம்,தோல், பற்களை  எடுத்துச்செல்வதாகவும் அவர் மேலும் கூறினார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .