2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஒஹிய மக்களுக்கு அறிவுறுத்தல்

Editorial   / 2017 டிசெம்பர் 09 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், பாரத ரத்திணா

பதுளை மாவட்டத்திலிருந்து வெலிமடை பொரலந்த வழியாக ஹோட்டன் சமவெளி செல்லும் ஒஹிய பிரதான வீதியில், ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒஹிய பிரதேசத்திலிருந்து ஹோட்டன் சமவெளி மற்றும் உடவேரிய, ஒஹிய ஆகிய தோட்டங்களுக்குச் செல்லும் பிரதான வீதியில், ஒஹிய புகையிரத நிலையத்துக்கு அருகாமையில், வளைவுப்பகுதியில் இவ்வாறு மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

இதனால், சாரதிகளை அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு ஹப்புத்தளை பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

சீரற்ற காலநிலையினால், பாதையில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதுடன், கற்பாறைகளும் மலைகளிலிருந்து உருண்டு வருவதோடு, மரங்களும் முறிந்து விழுகின்றன.

இதேவேளை, பாதசாரிகளும் அவதானத்துடன் செயற்பட்வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்னர். குறித்த பகுதிகளுக்குச் செல்வதற்கு, ஒரே ஒரு பஸ் சேவை ஈடுப்பட்டுள்ளதுடன், அதிக மண்சரிவு காரணமாக, குறித்த பஸ் சேவை ஒஹிய புகையிரத நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், பஸ்ஸிலும் புகையிரதத்திலும் செல்லும் சுற்றுலா பிரயாணிகள்,  அவ்விடத்திலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் தொலைவிலுள்ள ஹோட்டன் சமவெளி மற்றும் உலக முடிவு ஆகியவற்றைப் பார்வையிடுவதற்கு, குறித்த வீதியே பயன்படுத்த வேண்டியுள்ளது.

ஆகையால், மாற்று வழிகள் இன்மையால், பயணிகள் நிதானத்துடன் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என, பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .