2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

காட்டு யானைகளின் மரணங்கள் குறைந்தன

Editorial   / 2020 மே 25 , பி.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில், காட்டு யானைகளின் மரணங்கள், 50 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது என, உடவளவை சரணாலய காரியாலய ம் தெரிவித்துள்ளது.

அதேபோன்று காட்டு யானைகளால் தாக்கப்பட்டு பலியாகும் மனிதர்களின் எண்ணிக்கையும் 30 சதவீதத்தால் குறைந்துள்ளதாக இக்காரியாலய அதிகாரிககள் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு, தடுப்பூசி ஏற்றல், யானை பொறி வைத்தல், மின்சாரம் வைத்தல் போன்ற மனித செயற்பாடுகளால், அதிகளவு யானைகள் மரணித்து வந்ததாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், வன பரிபாலண திணைக்களத்தால் முன்னடுக்கப்பட்ட தொடர் செயற்பாடுகள் காரணமாக, மனிதச் செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் மனித உயிர்களும் தற்போது பாதுகாக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .