2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

’கட்சிகளுக்கும் எமக்கும் தொடர்பில்லை’

Editorial   / 2020 ஜூன் 29 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் ஏனைய தமிழ்க் கட்சிகளுக்கும் இடையே, எந்தவொரு தொடர்பும் கிடையாது என்றும் எனவே, போலி வேட்பாளர்களை மக்கள் நம்பிவிடக்கூடாது என்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொருளாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

கொத்மலையில் நேற்று (28) நடைபெற்றப் பிரசாரக் கூட்டத்தின் பின்னர், ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை காங்கிரஸுடன் தொடர்பு இருப்பதாகவும் எதிர்காலத்தில் இணைவோம் என்று கூறியும் சிலர் பிரசாரம் செய்து வருவதாகக் குற்றஞ்சாட்டிய அவர், கெஞ்சிக் கெஞ்சி வாக்கு கேட்பதாகவும் தெரிவித்தார்.

எனவே, நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் தொழிற்சங்கங்களுக்கும் காங்கிரஸுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும்  கட்சியை விட்டு வெளியேறியவர்களை இணைத்துக்கொள்ளும் எண்ணம் இல்லை என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்னர் தங்களால் முன்வைக்கப்பட்ட 1,000 ரூபாய் கோரிக்கையை, ஐக்கிய தேசியக் கட்சியே தடுத்து நிறுத்தியது என்றும் தற்போதுள்ள அரசாங்கத்தின் கீழ், சம்பளப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது என்றும் நாளை கையொப்பம் இடச் சொன்னாலும் நாம் இட்டுவிடுவோம் என்றாலும் அவசரப்படமாட்டோம் என்று கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X