2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கட்டணங்களைச் செலுத்தாத பஸ்களுக்கு பஸ் நிலையத்துக்குள் பிரவேசிக்கத் தடை

எம். செல்வராஜா   / 2018 செப்டெம்பர் 24 , பி.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை பிரதான பஸ் நிலையத்துக்கு, கடந்த 9 வருடங்களாக, பஸ் நிலையத்துக்குள் பிரவேசிப்பதற்கான கட்டணங்களைச் செலுத்தாத தனியார் பஸ்களுக்கும் பஸ் பயணத்துக்கான அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளாத தனியார் பஸ்களுக்கும், பதுளை பிரதான பஸ் நிலையத்துக்குள் பிரவேசிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  

ஊவா மாகாண பஸ் பயண சேவை அதிகார சபையின் மூலம், 24.09.2018 அன்றிலிருந்து அமுலுக்கு வரும் வகையில், மேற்படி தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

பதுளை - ரன்தெனிகல வழியாக, கண்டிக்குச் செல்லும் தனியார் பஸ்களுக்கே, இந்தத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

2009ஆம் ஆண்டிலிருந்து இதுவரையான ஒன்பது வருட  காலப்பகுதியில், பதுளை பஸ் நிலையத்துக்குள் பிரவேசிக்க பிரவேசக்கட்டணங்களோ, பஸ் பயண அனுமதிப்பத்திரங்களோ, தனியார் பஸ் உரிமையாளர்கள் பெற்றுக்கொள்ளவில்லை என்றும் இதனால் ஊவா மாகாண பஸ் பயண சேவை அதிகார சபைக்கு, இலட்சக்கணக்கில் நட்டம் ஏற்பட்டுள்ளது என்றும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.  

எனவே, இந்த நட்டம் ஏற்படுவதற்கு ஏதுவாக அமைந்த பஸ் உரிமையாளர்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அதிகாரசபையால் ​அறிவிக்கப்பட்டுள்ளது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X