2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

கட்டாக்காலி எருமைகளை கால்நடை வளர்ப்பாளர்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை

Editorial   / 2019 பெப்ரவரி 05 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதத் எம்.எம்.ஹேவா

நுவரெலியா, அம்பேவெல, பட்டிப்பொல, மீபிலிமான ஆகிய பிரதேசங்களில், உரிமையாளர்களின்றி கட்டாக்காலிகளாக அலைந்துத்திரியும் எருமை மாடுகளைப் பிடித்து, கால்நடை வளர்ப்பாளர்களிடம் கையளிப்பதற்கான வேலைத்திட்டத்தை, நுவரெலியா மாவட்டச் செயலகம் முன்னெடுக்கவுள்ளது.

நுவரெலியா மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே, மேற்படித் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதன்போது கருத்துரைத்த மாவட்டச் செயலாளர் ஆர்.எம்.பி.புஸ்பகுமார, மேற்படி பிரதேசங்களில், மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலாகவும் விவசாயச் செய்கைகளுக்க பாதிப்பையும் ஏற்படுத்தும் காட்டக்காலி எருமைகளைப் பிடித்து, அவற்றை, கால்நடை வளர்ப்பாளர்களிடம் கையளிப்பதனூடாக, கால்நடை வளர்ப்பாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியுமென்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

கட்டாக்காலி எருமைகளைப் பிடிப்பதற்கு, வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகளின் முழுமையான ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் பிரதேசச் செயலாளர்கள் மற்றும் கிராம சேவகர்களினூடாக, கால்நடை வளர்ப்பாளர்களின் விவரங்களைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X