2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கணித பாட அபிவிருத்திக்கான செயலமர்வு

Editorial   / 2018 ஜூன் 01 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

“மத்திய மாகாணத்தில், கடந்த காலங்களில் கணித பாடத்தில் மாத்திரம் சுமார் 92 பாடசாலைகள் பின்னடைந்துள்ளன. எனவே, கணித பாடத்தில் அனைத்து மாணவர்களையும் சித்திபெறச் செய்ய வேண்டும் என்பதற்காக, “அனைவருக்கும் கணிதம்” என்ற செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம். இந்தத் திட்டத்தின்மூலம் அதிகமான மாணவர்களை சித்தி பெறச்செய்ய முடியும். இதற்காகவே, முதற்கட்டமாக நாங்கள் மத்திய மாகாணத்தில் செயலமர்வுகளை நடத்தி வருகின்றோம்” என கல்வி இராஜங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

 “அனைவருக்கும் கணிதம்” வேலைத்திட்டத்தின் கீழ், மத்திய மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 92 பாடசாலைகளின் அதிபர்களுக்கான கருத்தரங்கு, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தலைமையில், ஹட்டன் சீடா மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்,

கடந்த வருடத்தைவிட இவ்வருடம் கணிதப்பெறுபேறு தேசிய ரீதியில் அதிகரித்துள்ள வேளையிலும் தோட்டப்புற பாடசாலைகளில் அல்லது தோட்டப்புற மாணவர்களை அதிகமாகக் கொண்ட பாடசாலைகளில், கணித பாடத்தின் அடைவுமட்டமானது, தேசிய மட்டத்தைவிட மிகக் குறைவாகவே காணப்பட்டமை கண்டறியபட்டள்ளது.

இந்நிலைமை மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணத்தை அடிப்படையாகக் கொண்ட மாவட்டங்களிலேயே அதிகமாகக் காணப்படுகின்றது.

இதனை மாற்றுவதற்கும் கணித பெறுபேற்றை மலையகத்தில் அதிகரிப்பதற்கும் கல்வி இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் “அனைவருக்கும் கணிதம்” எனும் அடிப்படையில் துரித வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்” என்றார்.

இதில் கல்வி அமைச்சின் கணித பிரிவின் கல்விப் பணிப்பாளர், கணித பிரிவின் பிரதி மற்றும் உதவிக் கல்வி பணிப்பளார்கள், தோட்ட பாடசாலைகள் பிரிவின் கல்வி பணிப்பாளர், தேசிய கல்வி நிறுவனத்தின் கணித பிரிவின் பணிப்பளார், சிரேஷ்ட விரிவுரையாளர், மத்திய மாகாணத்தின் 92 பாடசாலைகளின் அதிபர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது பாடசலைகளுக்கு விசேட கணிதபாட வழிகாட்டி நூலும் வழங்கப்பட்டன


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .