2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கண்டி தேசியக் கலை விடுதி நாளை திறப்பு

Editorial   / 2018 மே 31 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலைஞர்களின் பயன்பாட்டுக்காக, கண்டி - குண்டசாலையில் அமைக்கப்பட்டுள்ள தேசியக் கலை விடுதியானது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், எதிர்வரும் 2ஆம் திகதி   பிற்பகல் 2 மணியளவில், பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

மேற்படி தேசியக் கலை விடுதியை, மக்கள் பாவனைக்குக் கைளிக்கும் நிகழ்வில், உயர்க் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

465 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த விடுதியானது, நூற்றுக்கும் அதிகமானோர் தங்கியிருப்பதற்கான வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

கலை கலாசாரம் தொடர்பாக நடத்தப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் பாடநெறிகளுக்காக, இந்த நிலையத்தைப் பயன்படுத்த முடியுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

திறந்த வெளியரங்கு மற்றும் பயிற்சி அறைகள் இரண்டைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள இந்த விடுதி, 5 ஏக்கர் நிலப்பரப்பில் அமையப்பெற்றுள்ளதுடன், இலங்கையில் தேசிய ரீதியில் அமைக்கப்பட்ட ஒரேயொரு  கலைவிடுதி இதுவென்றும் குறிப்பிடப்படுகின்றது.

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய கலை விடுதி, பாடசாலையை விட்டு விலகிய இளைஞர்கள் மற்றும் கலைஞர்களுக்கான பயிற்சிகளை நடத்துவதற்காக, கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .