2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

கண்டி மாவட்டத்தில் 1,546 பேர் பாதிப்பு

Editorial   / 2018 மே 28 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

சீரற்ற வானிலை காரணமாக, கண்டி மாவட்டத்தில் நேற்று (28) காலை வரையில், 350 குடும்பங்ளைச் சேர்ந்த 1,546 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கண்டி மாவட்ட உதவிப் பணிப்பாளர் இந்திக்க ரணவீர தெரிவித்தார்.

மழை வானிலையால், கண்டி மாவட்டத்தில் பஸ்பாகேகோரலய பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட மக்களே, அதிகளவு பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனரென்றும் அவர் தெரிவித்தார்.

மேற்படி பிரதேச செயலாளர் பிரிவில், 242 குடும்பங்களைச் சேர்ந்த 1,103 பேரும், கங்கஇஹல கோரலய பிரதேச செயலகப் பிரிவில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 46 பேரும், உடபளாத்த பிரதே​ச செயலகப் பிரிவில் 20 குடும்பங்களைச் சேர்ந்த 77 பேரும், பாத்ததும்பறை பிரதே​ச செயலகப் பிரிவில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 23 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கண்டி மாவட்டத்தில், 112 வீடுகள் சேதமடைந்துள்ளனவெனவும் பணிப்பாளர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X