2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’கண்டி மாவட்டத்தில் 244 பேர் பாதிப்பு’

மொஹொமட் ஆஸிக்   / 2019 ஒக்டோபர் 13 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி மாவட்டத்தில், கடந்த சில தினங்களாக பெய்து வந்த கடும் மழை காரணமாக, மாவட்டத்தில் 56 குடும்பங்களைச் சேர்ந்த 244 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என,  கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதி பணிப்பாளர் இந்திய ரணவீர தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

பாதிக்கப்பட்டவர்களில், 38 குடும்பங்களைச் சேர்ந்த 187 பேர், பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் மாவட்டத்தில் 11 பிரதேச செயலக் பிரிவுகளுக்கு இந்த அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

பாத்ததும்பரை, தும்பனை, உடபலாத்த, பஸ்பாகே கோரலய, கங்கஇஹல கோரலய, அக்குறணை, உடுநுவர, கங்கவட்ட கோரலய, பாத்தஹேவாஹெட்ட ஆகிய பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பகுதிகளே பாதிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கான அனைத்து உதவிகளையும் கண்டி மாவட்ட செயலகமும் அந்தந்த பிரதேச செயலகமும் செய்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .