2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கண்டி வன்முறை சம்பவம்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதற்கட்ட நிவாரணம்

மொஹொமட் ஆஸிக்   / 2018 மார்ச் 20 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, முதற்கடட இழப்பீடுகள் வழங்கும் நிகழ்வு, நேற்று  (19)​ நடைபெற்றது.

கண்டி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், முஸ்லிம் மத மற்றும் தபாற்றுறைஅமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்கஅமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, மத்திய மாகாண சபை  உறுப்பினர்களான ஜே.ஜெய்னுல் ஆப்தீன் லாபிர், ஹிதாயத் சத்தார், புனர்வாழ்வு அதிகாரசபை அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

பாதிக்கப்பட்ட 66 வீடுகள், 65 வர்த்தக நிலையங்கள் என்பவற்றுக்கு மட்டும், முதற்கட்டமாக, 98 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

அக்குறணை, பூஜாப்பிட்டிய, ஹரிஸ்பத்துவ, குண்டசாலை, கங்கவட்ட கோரளை போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்களும், இதில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .