2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கந்தப்பளை நகரில் இன்று முதல் குப்பைகளை பொறுப்பேற்கத் தடை

ஆ.ரமேஸ்   / 2019 மார்ச் 27 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கந்தப்பளை நகரில், இன்று (27) முதல் குப்பைகளைப் பொறுப்பேற்கப் போவதில்லை என்றும் இது தொடர்பில், சுத்திகரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜ், திட்டவட்டமாக அறிவித்துள்ளார். 

இது தொடர்பில் மேலும் கூறிய அவர், கந்தப்பளை நகர மக்கள், நுவரெலியா பிரதேச சபையால் பிறப்பிக்கப்படும் சட்டதிட்டங்களை மதித்து நடப்பதற்குத் தவறுகின்றனர் என்று குற்றஞ்சாட்டியதுடன், குறிப்பாக குப்பைகளை, உக்கும் குப்பை, உக்காத குப்பை என வகைப்படுத்தி போடுமாறு பலமுறை அறிவித்தல் விடுத்தும்கூட, கந்தப்பளை நகர மக்கள், இந்த நடைமுறையைப் பின்பற்றுவதற்குத் தவறிவிட்டனர் என்று தெரிவித்தார்.  

எனவே, நுவரெலியா பிரதேச சபையின் சட்டதிட்டங்களை மதித்து நடக்கும்வரை, கந்தப்பளை நகரில் சேகரிப்படும் குப்பைகளைப் பொறுப்பேற்கப் போவதில்லை என்றும், இது தொடர்பாக நுவரெலியா பிரதேச சபையின் சுத்திகரிப்பாளர் பிரிவினருடன், நேற்று (26) மதியம் கலந்தாலோசித்ததன் பின்னரே, இந்த அறிவிப்பை விடுத்ததாகவும் தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .