2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கந்தப்பளை வாராந்தச் சந்தை இருவாரங்களுக்குப் பூட்டு

Kogilavani   / 2021 மே 06 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ் 

நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட கந்தப்பளை நகரில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் வழமையாக இடம்பெற்று வருகின்ற வாராந்தச் சந்தை, இரண்டு வாரங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக  நுவரெலியா பிரதேச சபை பொது அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

கொரோனாவின் மூன்றாவது அலை நாட்டில்  மிக வேகமாக பரவிவருவதைக் கருத்திற்கொண்டு பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் முகமாகவே இந்த நடவடிக்கையை நுவரெலியா பிரதேச சபை மேற்கொண்டுள்ளதாக  சபையின் தவிசாளர் வேலுயோகராஜ் தெரிவித்தார்.

மேற்படிச் சந்தைக்கு, வலப்பனை,ஹங்குராங்கெத்த,இராகலை,நில்தண்டாஹின்ன ஆகிய பிரதேசங்களில் இருந்து அதிகமான வியாபாரிகள் வருகை தருகின்றனர் என்றும் இப்பகுதிகள் கொரோனா தொற்று பரவல் காரணமாக முடக்கப்பட்டப் பகுதிகள் என்றும் இதனைக் கருத்திற்கொண்டே, வாராந்தச் சந்தையை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

கந்தப்பளையிலும் ஜயலங்கா, பார்க் தோட்டம், கந்தப்பளை நகர் ஆகிய பிரதேசங்களில் இதுவரை 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன் 68 குடும்பங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .