2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கம்பளை - உடபலாத்த பிரதேச சபை அமர்வில் பதற்றம்

Editorial   / 2018 ஜூன் 13 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுரங்க ரஜநாயக்க

கம்பளை - உடபலாத்த பிரதேச சபையின் தவிசாளர் மீது, நேற்றைய தினம் (12) மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, மாரடைப்பு காரணமாக பிரதேச சபை எதிர்கட்சித் தலைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   

பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரே, தவிசாளர் மீது தாக்குதல்களை மேற்கொண்டதாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.   

தாக்குதலின்போது கண்ணாடி போத்தல் ஒன்று தலையில் பட்டதாலேயே, தவிசாளர் கடும் காயங்களுக்கு உள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

கம்பளை - உடபலாத்த பிரதேச சபை, எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அபிவிருத்தி பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்வதில்லையெனத் தெரிவித்து, நேற்றைய தினம் சபை முன்பாக ஆரப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.   
எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் 15 உறுப்பினர்களும் பொதுமக்களும், இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, தமக்கு இழைக்கப்படும் அநீதிக்கு நியாயம் வேண்டுமெனக் கோஷமிட்டனர்.   

இதன் பின்னர், கம்பளை - உடபலாத்த பிரதேச சபையின் அமர்வு ஆரம்பமான சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமரும் ஆசனங்களை, சபையின் தவிசாளர் மாற்றியமைத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.   
இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்ட நிலையில் அது மோதலாக மாறியமதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.   

இந்த மோதலின் போதே சபையின் தவிசாளர் காயமடைந்ததோடு, பதற்ற நிலைமை காரணமாக, பிரதேச சபை எதிர்கட்சித் தலைவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.   

இருவரும் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக, பொலிஸார் குறிப்பிட்டனர்.  இருவர் தரப்பிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X