2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கல்முனை விவகாரம்: ’விட்டுக்கொடுப்பு அவசியம்’

Editorial   / 2019 ஜூன் 22 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை விவகாரத்தில் முஸ்லிம் தலைவர்கள் விட்டுக்கொடுப்புடன் செயற்பட்டால் ஒரு சுமூகமான தீர்வை எட்ட முடியும் என, மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

கல்முனை பிரதேச செயலக விடயம் காரணமாக தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையே முறுகல் நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது என்று அவர் கூறினார்.

கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டபோது தமிழ் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்களுக்காக குரல் கொடுத்தார்கள் என்றும் எனவே, இந்த விடயத்தில் முஸ்லிம் தலைவர்கள் விட்டுக்கொடுப்புடன் செயற்பட்டால் ஒரு சுமூகமான தீர்வை எட்ட முடியும் என்றும் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .