2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’காணி வழங்கப்படும் வரை எமது செயற்பாடு தொடரும்’

Editorial   / 2018 ஓகஸ்ட் 06 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தோட்டங்களில் வாழ்கின்ற சகல குடும்பங்களுக்கும், தனி வீட்டுக்கான காணித் துண்டைப் பெற்றுக்கொடுக்கும் வரை, தமது செயற்பாடு தொடருமென, தமிழ் முற்போக்குக் கூட்டணி தெரிவித்தது.

மாத்தளைத் தோட்ட மக்களுக்கான “பசுமை பூமி” காணியுறுதி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார், இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், கடந்த 2015ஆம் ஆண்டு வரை, பெருந்தோட்டத்தில் வாழ்கின்ற எந்தவொரு மக்களுக்கும், காணி உரித்து வழங்கப்படவில்லை என்றும் தெரிவு செய்யப்பட்ட சிலருக்கே காணிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டு தனி வீடுகள் அமைக்கப்பட்டிருந்த போதும், அவற்றுக்குக் காணி உறுதிபத்திரம் பெற்றுக் கொடுக்கப்படவில்லை என்றும் கூறினார்.

எனினும், இந்த நல்லாட்சி அரசாங்கத்தில், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் வேண்டுகோளுக்கிணங்க, அமைச்சரவை அனுமதி பெற்று, தோட்ட மக்களுக்கு வீடுகளை அமைப்பதற்கான காணியும் அதற்கான உறுதிப்பத்திரமும் வழங்கப்பட்டு வருவதாகவும், அவர் தெரிவித்தார்.

“பசுமை பூமி” காணி வழங்களின் ஆரம்ப கட்டமே, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், அதன் முதற்கட்டமாக, குறிப்பிட்ட சிலருக்குக் காணி உறுதி பெற்றுக்கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

எஞ்சியுள்ளவர்களுக்கு, மூன்று கட்டங்களாகக் காணி உறுதிப்பத்திரம் பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் தோட்டங்களில் வாழ்கின்ற சகல குடும்பங்களுக்கும் காணியைப் பெற்றுக்கொடுக்கும் வரை, தொடர்ச்சியாக இந்தச் செயற்பாட்டைத் தாம் முன்னெடுப்பதாகவும், அவர் ​மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .