2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

காணி வழங்குவதில் பாகுபாடு காட்டவில்லை; ‘வீண் குழப்பத்தை ஏற்படுத்தாதீர்’

Editorial   / 2018 ஜூலை 11 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணி வழங்கலில் பாகுபாடு கட்டப்படவில்லை என்று தெரிவித்த கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார்,  மக்களிடையே வீண் பிரச்சினையை ஏற்படுத்த வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.   

இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,  

கடந்த காலத்தில், கண்டி மாவட்டத்துக்கு உட்பட்ட தோட்டக் காணிகள் அபகரிக்கப்பட்ட போது, மெளனமாக இருந்தவர்கள் இன்று  மெளனமாக இருந்தவர்கள் இன்று தோட்ட மக்களுக்கு காணிகளைப் பகிர்ந்தளிக்கும் போது வீண் குழப்பத்தை ஏற்படுத்துவது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.  

கண்டி மாவட்ட அரச தோட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு, காணிகள் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை, கட்டங்கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், இந்த வருட இறுதிக்குள் பெருமளவிலானவர்களுக்கு காணிகள் வழங்கப்பட்டிருக்கும் என்றும் தெரிவித்தார்.  

இந்நிலையில், காணியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கும் பெற்றுக் கொள்ளாதவர்களுக்கும் இடையில், குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில், சில விஷமத்தனமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.  

இத்தகையச் செயற்பாடுகள், மக்கள் மத்தியில் வீண் பிரச்சினையை தோற்றுவிக்கும் என்றுத் தெரிவித்த அவர், காணி வழங்கலில் தொழிற்சங்க பாகுபாடோ, அரசியல் பாகுபாடோ காட்டப்படவில்லை என்றும் இந்தத் திட்டத்தின் கீழ், தகைமை உடைய சகலரையும் உள்வாங்குவதே தமது நோக்கம் என்றும் தெரிவித்தார்.  

சில வேளைகளில், பெயர் பட்டியலில் சிலரது பெயர்கள் தவறவிடப்பட்டு இருக்கலாம் என்றும் அவ்வாறு தவறவிடப்பட்ட அனைவரினது விவரங்களையும் திரட்டி, காணிகள் வழங்குவதற்கான நடவடிக்கைள் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.  

“மக்களுக்கு இடையே குழப்பத்தை ஏற்படுத்தி, அவர்களுக்குக் கிடைக்க இருக்கும் நலனை இல்லாமலாக்கி விடாதீர்கள். இயலுமான வரைக்கும் அவசியமான ஆலோசனை வழிகாட்டல்களை வழங்கி, அனைவருக்கும் காணியைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஒத்துழைப்புத் தாருங்கள். இனி எமக்கு இத்தகைய ஒரு தருணம் கிடைக்காமல் போகலாம். கிடைத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, எமது மக்களை நில உடமையாளர்களாக்குவோம்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .