2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’காளான் வளர்ப்பை ஊக்குவிக்க நடவடிக்கை’

சிவாணி ஸ்ரீ   / 2020 ஜூன் 29 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சப்ரகமுவ மாகாணத்தில் காளான் வளர்ப்பு, உற்பத்தித் திட்டத்தை மேலும் ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்தார்.

கேகாலை மாவட்டத்தில் காளான் உற்பத்தி செய்யும் பிரதேசங்களுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டு, அங்கு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இந்தக் காளான் வளர்ப்பு, உற்பத்தித் திட்டத்தை சப்ரகமுவ மாகாண சபையும் கொரியா நாட்டின் சேமாவுல் திட்டமும் இணைந்து நடைமுறைபடுத்தி வருவதாகவும் கேகாலை மாவட்டத்தில் பிட்டியேகம, வல்பொல, ஹேவாதிவெல ஆகிய மூன்று கிராமங்களில் காளான் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது என்றும் கூறினார்.

மேற்படி திட்டத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேலும் கட்டி எழுப்ப முடியும் என்றும் அத்துடன் இத்திட்டத்தின் ஊடாக பலருக்கு தொழிவாய்பை பெற்று கொடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

மேற்படி காளான் உற்பத்தி மற்றும் வளர்ப்புத் திட்டம் சப்ரகமுவ மாகாண சபையின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றது என்று சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .