2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கிராமசேவகர் வராததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற சமுர்த்தி பயனாளிகள்

Editorial   / 2020 ஏப்ரல் 06 , பி.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரா.யோகேசன் 

நுவரெலியா மாவட்டத்தில் இன்று(6) ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில், சமுர்த்தி கொடுப்பனவைப் பெற்றுக்கொள்வதற்காக,  கிராம உத்தியோகத்தரின் அலுவலகத்துக்குச் சென்ற வட்டவளை பிரதேச மக்கள், கிராம சேவகர் வருகைதாரததன் காரணமாக, கொடுப்பனவைப் பெறாது ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளனர்.

இதனால், சுமார் 50 குடும்பங்கள் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால், நாளாந்த உணவு பொருள்களை பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் சமுர்த்தி கொடுப்பனவையே தாம் நம்பியிருந்ததாகவும் எனினும் அதனைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் மேற்படி குடும்பங்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே தினமொன்றை அறிவித்து, சமுர்த்திக் கொடுப்பனவைப் பெற்றுக்கொடுப்பதற்கு, அதிகாரிகள் நடவக்கை எடுக்க வேண்டும் என்றும் மேற்படி குடும்பங்கள் கோரிக்கை விடுக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .