2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘குடியிருப்பு சரிந்து விழுந்தும் கண்டுகொள்ளாத அதிகாரிகள்’

எஸ்.சதிஸ்   / 2019 மார்ச் 04 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொகவந்தலாவ டின்சின் தோட்டப்பகுதியில், ​15ஆம் இலக்கத் தொடர் லயன் குடியிருப்பின் ஒரு பகுதி, கடந்த வெள்ளிக்கிழமை (01) சரிந்து விழுந்தபோதிலும், இதுவரையில், இது தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.  

கடந்த 10 நாள்களுக்கு முன்னர், குறித்த லயன் குடியிருப்பில் ஏற்பட்ட பாரிய வெடிப்புகள், குடியிருப்பு தாழிறக்கம் காரணமாக, லயன்குடியிருப்பில் வசித்த 12 குடும்பங்களைச் சேர்ந்த 51 பேர், அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, உறவினர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

பாதிக்கப்பட்ட மக்களின் லயன் குடியிருப்பின் பாதுகாப்புக்கு, தோட்டநிர்வாகத்தால், மரங்கள் வழங்கப்பட்டபோதிலும், கடந்த வெள்ளிக்கிழமை, குடியிருப்பின் ஒரு தொகுதி, உடைந்து விழுந்துள்ளது.  

இந்த லயன் குடியிருப்பு சேதமடைந்துள்ள சம்பவம் தொடர்பில், கிராம உத்தியோகத்தர், பொலிஸார், தோட்ட நிர்வாகம் என அனைவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், நிலைமை தொடர்பில் இதுவரை யாரும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.  

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இதற்கு ஒரு தீர்வை வழங்கவேண்டும் என, பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X