2024 மார்ச் 28, வியாழக்கிழமை

’குரங்குகளைக் குறைக்குமாறு வேண்டுகோள்’

Editorial   / 2019 செப்டெம்பர் 23 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ.புவியரசன்

பதுளை பிரதேசசபைக்குட்பட்ட பசறை வீதி 2,3ஆம் கட்டை, வீனித்தகம, வேவெஸ்ஸ, இங்குருகமுவ தோட்ட, கிராம பகுதிகளில் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்து காணப்படுவதால், இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதாக கவலை, மக்கள் தெரிவித்தனர்.

தினமும், கூட்டம் கூட்டமாக வரும் குரங்குகள், வீடுகளுக்கு அருகிலுள்ள மரங்களில் காய்த்துத் தொங்கும் பழங்களைப் பறித்து உண்டு, அவற்றை அங்கும் இங்கும் வீசி, நாசம் செய்துவிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறு வீட்டுத் தோட்ட செய்கைகளுக்கும், குரங்குகள் சேதம் விளைவிப்பதாகவும் இந்தப் பிரச்சினை, பல ஆண்டுகளாகக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைக் காலமாக, வரட்சியான வானிலை நிலவி வருவதால், தமது உணவுக்கு வழியின்றி இருக்கும் குரங்குகள், வீடுகளில் உள்ள சமைத்த உணவுகளையும் உண்பதற்கு, வீட்டு ஜன்னல், கூரை வழியாக வர முற்படுவதுடன், வீட்டில் உள்ளவர்களையும் தாக்க முயற்சிப்பதாகவும் குடியிறுப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.  

இவ்விடயம் தொடர்பாக பல தடவைகள் உரிய அதிகாரிகளுக்கு முறையிட்ட போதும், குரங்குகளின் நடமாட்டத்தை குறைக்க இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் எனவே, இனியாவது ஏதாவது நடவடிக்கை எடுக்குமாறு, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X