2024 மார்ச் 28, வியாழக்கிழமை

குரங்குமலையில் நன்னீர் மீன் வளர்ப்புத் திட்டம் ஆரம்பிப்பு

Kogilavani   / 2017 ஒக்டோபர் 12 , பி.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன்

ஜனாதிபதியின் தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டத்துக்கு அமைவாக, பெருந்தோட்ட மக்களின் போசாக்கு மட்டத்தை அதிகரிக்கும் நோக்கில், ஹட்டன், செனன் குரங்குமலைத் தோட்டத்தில், நன்னீர் மீன் வளர்ப்புத் திட்டம், புதன்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.   

இதற்கமைவாக, நீரேந்து பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 12 குளங்களில், 12 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன.   
நுவரெலியா மாவட்ட நன்னீர் மீன் வளர்ப்புத் திணைக்களம், பெருந்தோட்ட மக்களின் போசாக்கை மேப்படுத்தும் வகையில் இத்திட்டத்தை ஆரம்பித்துள்ளதுடன், ஏனைய பெருந்தோட்ட பகுதிகளிலும், அடையாளங்காணப்பட்டுள்ள நீரேந்தும் பகுதிகளில் குளங்கள் அமைத்து, நன்னீர் மீன் வளர்ப்புத் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது.  

நீரேந்து பகுதிகளில், ‘எங்கில்லா’ எனும் மீனினமே விடப்படுகிறது. இந்த மீனினம், 6 மாதங்களுக்கும் ஒரு வருடத்துக்கும் இடைப்பட்டக் காலத்தில், 20 மடங்காக உற்பத்தியாவதுடன், சுமார் 1 கிலோகிராம் எடையுடையதாக வளர்ச்சியடைவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  

இதேவேளை, நோர்வூட் நிவ்வெளிகம தோட்டத்தின் தொழிற்சாலை பிரிவிலும், நன்னீர் மீன்பிடி வளர்ப்பு ஊக்குவிக்கப்படவுள்ளது.   

இதற்காக, மத்திய மாகாண விவசாய மற்றும் மீன்பிடித்துறை அமைச்சின் ஊடாக 20 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிதி ஒதுக்கீட்டின் ஊடாக, குறித்த பகுதியில் மீன் குஞ்சுகளை வளர்ப்பதற்கான குளம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள், செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X