2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

குறுகிய கால உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்பாடு

மு.இராமச்சந்திரன்   / 2017 ஒக்டோபர் 22 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹற்றன், டிக்கோயா நகரங்களை அண்டிய தோட்டங்களில் குறுகிய காலத்துக்குள் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டு வருவதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்

மலையக புதிய கிராமங்கள் , உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் 10 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் அட்டன் டன்பார் தோட்டத்தில் ஏற்படுத்தப்படவுள்ள குடிநீர்த் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வில் (21) கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,

“டன்பார், தரவளை, டிக்கோயா, பூல்பேங்க், மணிக்கவத்தை, வனராஜா, பன்மூர் போன்ற தோட்டங்கள் ஹற்றன், டிக்கோயா நகரங்களுக்கு அருகிலுள்ள போதும் இந்தத் தோட்டங்கள் உட்கட்டமைப்பு வசதிகளின்றி பின்தங்கிய நிலையிலேயே உள்ளன. இந்தத் தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் அமைச்சர் திகாம்பரத்தின் மீது நம்பிக்கை கொண்டு அவரை ஆதரித்து வருவதால் இந்தத் தோட்டங்களில் குறுகிய காலத்துக்குள் அமைச்சரின் ஆலோசனைக்கேற்ப உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வருகின்றோம். பாதைகள், குடிநீர் வசதிகள், வீடமைப்பு போன்ற திட்டங்;கள் இந்தத் தோட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன”.

“இதற்கேற்ப ஹற்றன், டன்பார் தோட்ட மக்கள் மிக நீண்டகாலமாக குடிநீர் வசதியில்லாத காரணத்தினால் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கி வந்தனர். இவ்விடயம் தொடர்பாக அமைச்சர் திகாம்பரத்தின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டமையைத் தொடர்ந்து தற்போது இந்தத் தோட்டத்தில் 10 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் குடிநீர் திட்டமொன்று தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது” எனத் தெரிவித்தார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .