2024 மார்ச் 28, வியாழக்கிழமை

’குறைகூறும் அரசியல் பழக்கம் இல்லை’

எஸ்.சதிஸ்   / 2020 ஜூலை 09 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் அமைச்சராக இருந்த காலத்தில், எவருடைய பெயர்ப்பலகையை நீக்கியோ, குறைகூறியோ அரசியலை முன்னெடுக்கவில்லை என, இலங்கை தொழிலாளர்காங்கிரஸின் நிதிச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

டிக்கோயாவில், நேற்று (08) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில், நுவரெலியா மாவட்டத்துக்கு தனிப் பல்கலைக்கழகம் அமைக்கவேண்டும் என்று, அமரர் ஆறுமுகன் தொண்டமான் கோரியிருந்தார் என்றும் அதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

கடந்த அரசாங்கத்தில் இருந்தவரக்ள், அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பெயர்ப் பலகைகளை அகற்றுவதையே முதலில் செய்தார்கள் என்றும் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 4,000 வீட்டுத்திட்டத்தைக் கூட முழுமையாகப் பூர்த்தி செய்யாதோர், இன்று தங்களைப் பற்றி விமர்சனங்களை முன்வைத்து வருவதாகவும் அவர் கூறினார்.

தாங்கள், மக்களுக்கான சேவைகளை முன்னெடுத்ததைத் தவிர, விளம்பரங்களுக்காக சேவை செய்யவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X