2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

குளவி கொட்டில் 35 தொழிலாளர்கள் பாதிப்பு

Kogilavani   / 2017 செப்டெம்பர் 20 , பி.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன்

 

பொகவந்தலா  லொயினோன்   மற்றும் பத்தனை குயின்ஸ்பரி ஆகிய தோட்டங்களில் குளவி கொட்டுக்கு இலக்கான  35 தொழிலாளர்கள்,  வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவை  லொயினோன் தோட்டத்தில்,  15 பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளர்களே, இன்று மாலை குளவிக்கு கொட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.

இவர்களில் 9 பேர் சிகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளனரெனவும்  6 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனரெனவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், பத்தனை குயின்ஸ்பரி தோட்டத்தில் குளவிகொட்டுக்கு இலக்கான 20 தொழிலாளர்கள் நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த போதே, இவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இவர்களில் 13 பேர் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளனரெனவும்  7 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனரெனவும்  வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .