2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘குழந்தை’ வேட்பாளர் குழப்பமாம்

Editorial   / 2018 ஜனவரி 17 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக கட்சியொன்றைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவர், குழந்தையைப் போல, குழப்பம் செய்துகொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

அவர், தெரிவு செய்யும் பட்டியலிலேயே பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார். அக்கட்சி வெற்றியடையுமாயின், அப்பிரதேச சபைக்கு, அவரே தலைவராகவும் நியமிக்கப்படுவார் என கட்சியின் தலைவர் உறுதியளித்துள்ளார்.  

இந்நிலையில், அவர் தன்னுடைய தொகுதியில் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வதை விடவும், ஏனைய தொகுதிகளில் பிரசாரங்களில் ஈடுபடும் வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டுள்ளதாக அறியமுடிகின்றது.  

பொகவந்தலாவைப் பிரதேசத்திலேயே இவ்வாறு இடம்பெறுவதாக அறியமுடிகின்றது.  

அங்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சேவல் சின்னத்திலும், ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்திலும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தாமரை மொட்டுச் சின்னத்திலும் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இதிலொரு கட்சியைச் சேர்ந்த சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவரே, ஏனையத் தொகுதிகளில் ​களமிறங்கியுள்ள அதே இனத்தைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு, நேரடியாகவும் மறைமுகமான முறையிலும் அச்சுறுத்தல் விடுத்துவருகின்றார் என அறியமுடிகின்றது.  

விருப்பு வாக்குமுறைமை ஒழிக்கப்பட்டுள்ள நிலையில், சின்னக் குழந்தையைப் போல அவர் செயற்படுவது, ஏனைய வேட்பாளருக்கு மட்டுமன்றி, வாக்காளர்களுக்கு கூட பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக அறியமுடிகின்றது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X