2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

’கூட்​டு ஒப்பந்தம் தடையெனில் வாபஸ் பெற்றுக்கொள்ளவும் தயங்கேன்’

Editorial   / 2020 ஜனவரி 28 , பி.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி கூறிய 1,000 ரூபாய் சம்பளத்தை வழங்குவதற்கு, கூட்டு ஒப்பந்தமே தடையாக இருக்கின்றது என்றால், கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட பொறுப்பு வாய்ந்த தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் எனும் வகையில், அந்தக் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து தான் வாபஸ் பெற்றுக்கொள்வதாக, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக மேலும் கூறியுள்ள அவர்,  

எது எவ்வாறாயினும், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம், 1,000 ரூபாயாக இருக்கவேண்டும் என்றும் அத்துடன் மேலதிகமாகப் ​பறிக்கப்படும் ஒவ்வொரு ​கிலோகிராம் கொழுந்துக்கும் மேலதிகக் கொடுப்பனவு வழங்கப்படல் வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.  

தனியார் கம்பனிகளுடன் பெருந்தோட்டத் தேயிலை உற்பத்திகளை ஒப்பிட முடியாது என்றும் ஏனெனில், கம்பனிகள் குறிப்பிட்ட நிலத்தைக் கொண்டு நன்றாகப் பராமரித்து நல்ல விளைச்சலைப் பெறுகின்றனர் என்றும் ஆனால், 22 பெருந்தோட்டக் கம்பனிகளும், தேயிலை மலைகளைக் காடாக்கி, பராமரிக்காமல், இருந்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.  

இதேவேளை, நன்றாகக் கொழுந்து பறித்தால் மாத்திரமே சம்பளம் வழங்கப்படும் என்று இவர்கள் இனியும் எண்ணுவார்களாயின் அது நிச்சயம் பகல் கனவாகவே அமையும் என்றும் அத்​தகைய செயற்பாட்டுக்கு ஒரு தொழிற்சங்கவாதியாக என்றும் இடமளிக்கப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X