2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

‘கூட்டு ஒப்பந்த விவகாரம் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது’

Nirosh   / 2019 ஜனவரி 14 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான கூட்டொப்பந்தக் காலம் நிறைவடைந்து, மூன்று மாதங்கள் கடந்துள்ள போதிலும், புதிய ஒப்பந்தம் செய்துகொள்வதிலுள்ள இழுபறி நிலை, பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளதென, சிவில் அமைப்புகளின் ஒன்றியமான ஒருமீ அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பில், அவ்வமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், கூட்டு ஒப்பந்தம் தொடர்பிலான அ​மைச்சர் நவீன் திசாநாயக்கவின் கருத்தையும் முதலாளிமார் சம்மேளனத்தின் புதிய முன்மொழிவையும் விமர்சித்துள்ளது.  

அதாவது அமைச்சர் நவீன், 1,000 ரூபாயை அடிப்படைச் சம்பளமாக வழங்க முடியாது என்று, நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் அறிவித்திருந்தார். இதேவேளை முதலாளிமார் சம்மேளனம், சம்பள அதிகரிப்பு விடயத்தில் முன்வைத்துள்ள புதிய முன்மொழிவின்படி, மூன்று வருடங்களுக்கு 75 ரூபாயே அதிகரிக்கப்படுகிறது.  

இவ்வருடம் அடிப்படைச் சம்பளமாக 625 ரூபாயும் மொத்தச் சம்பளமாக 875 ரூபாயும் 2ஆம், மூன்றாம் வருடங்களில், முறையே 650 ரூபாய், 675 ரூபாய் என, சம்பளம் வழங்கப்படவுள்ளது.  

இந்த முன்மொழிவு, தொழிலாளர்களுக்கு தொழில் மீதும் தாம் 200 வருடகாலமாக உயிரிழந்து வாழ்ந்துவரும் மண் மீதும் உள்ள நம்பிக்கையை அறுத்து, அம்மண்ணிலிருந்து மக்களை அகற்றும் உள்நோக்கம் கொண்ட செயலாக அமைந்துள்ளதென்று, அவ்வமைப்புச் சாடியுள்ளது.  

முதலாளிமார் சம்மேளனம், மலையக மண்ணோடு தொடர்புடைய மாற்றுத் திட்டத்தை விஸ்தரித்திருக்கிறார்களோ? என்ற சந்தேகத்தையும் இந்த முன்மொழிவு ஏற்படுத்தியுள்ளதாக, ஒருமீ அமைப்புக் குற்றஞ்சாட்டியுள்ளது.  

மேலும் தொழிலாளரின் வாழ்வைப் பாதுகாக்கும் வகையில், அடிப்படைச் சம்பளம் 1,000 ரூபாய் வேண்டும் என கோரிக்கை விடுத்து மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களும் அவர்களுக்கு ஆதரவான பொது அமைப்புகளும் மலையகத்திலும் மலையகத்துக்கு வெளியிலும் நடத்தும் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில், முதலாளிமார் சம்மேளனம் சம்பள அதிகரிப்புத் தொடர்பான யோசனையை முன்வைத்துள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .