2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கூட்டுஒப்பந்த விவகாரம்; ‘மூன்று வருட முன்மொழிவு வேடிக்கையானது’

Editorial   / 2019 ஜனவரி 15 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ சண்முகநாதன்  

புதிய ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதிலேயே, இழுபறித் தன்மை காணப்படுகின்ற நிலையில், மூன்று வருடங்களுக்கு ஒருமுறை ஒப்பந்தம் செய்துகொள்வதற்கான முன்மொழிவு, வேடிக்கையாக உள்ளதென, மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம். ராம் விமர்சித்துள்ளார். 

இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை செய்துகொள்ளப்படும் கூட்டு ஒப்பந்தமே, தொழிலாளர்களுக்குப் பாதகமாக அமைகின்ற நேரத்தில், மூன்று வருடங்களுக்கு ஒருமுறை ஒப்பந்தம் செய்து கொள்ள முயற்சிப்பதும், அந்த யோசனையை முன்வைப்பதும் எத்தகைய மோசமான செயல் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார். 

எனவே, தொழிலாளர் வர்க்கத்தை கிள்ளு கீரையாக நினைத்து அவர்களின் வாழ்வாதாரத்தோடு விளையாட நினைக்கும் கம்பனிகளுக்கும் அதற்கு உறுதுணையாக இருக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் எதிராக, மலையக அமைப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து எதிர்ப்பை வெளியிட்டு, தொழிலாளர் வர்க்கத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .