2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கூட்டொப்பந்த பேச்சில் குரல்கொடுக்க “இ.தொ.காவை பலப்படுத்தவும்”

Editorial   / 2017 டிசெம்பர் 24 , பி.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதிஸ்

“கூட்டொப்பந்த பேச்சில், பலம் பொருந்தியக் கட்சியாக இருந்து குரல்கொடுக்க வேண்டுமெனில், மலையக மக்கள் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை, பலம் பொருந்தியக் கட்சியாக மாற்றுவதற்கு, மக்கள் அனைவரும் அணிதிரள வேண்டும். எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற சபைத் தேர்தலில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்" என, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

“எனவே, வருகின்றத் தேர்தலில், அனைத்து மக்களும் ஒன்றிணைந்து ஒற்றுமையாகச் செயற்பட்டால் மட்டுமே, கூட்டொப்பந்தத்தின் பலமாக இருந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முடியும்” என்றும் அவர் கூறினார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சேவல் சின்னத்தில் போட்டியிடும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், டிக்கோயா, பொகவந்தலாவை, சாமிமலை போன்ற பகுதிகளிலுள்ள தோட்டப்புறங்களுக்குச் சென்று, பொதுமக்களை சந்தித்து உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மக்கள் சந்திப்பில், முன்னாள் நாடாளுமன்ற ஊறுப்பினர் பெ.இராஜதுரை, நுவரெலியா பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.சதாசிவம் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.

இங்கு மேலும் உரையாற்றிய அவர்,

'மலையகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று கோரியே, மலையக மக்கள் கடந்த காலங்களில் வாக்களித்தார்கள். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில், எவ்வித மாற்றத்தையும் மலையக மக்கள் காணவில்லை.

“இன்று ஒரு தோட்டத்தொழிலாளரி, அரைகிலோ தேயிலைக் கொழுந்தை குறைவாக பறித்தால் அரை பேர் மட்டுமே, தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது. தோட்டத் தொழிலாளர்களுக்கு முழுமையானச் சம்பளம் கிடைப்பதில்லை.

“தொழிலாளர்களிடமிருந்து 3 அல்லது 4 கிலோ கிராம் கொழுந்தை, தோட்ட நிர்வாகம் பிடித்து வைத்துக்கொள்கிறது. இதேவேளை, தோட்டத்துறைமார், தொழிலாளர்களுக்கு பல கெடுபிடிகளை கொடுத்து வருகின்றனர்.

“ஆரம்பக் காலங்களில், தோட்டத் தலைவர்களுக்கம் தோட்ட அதிகாரிக்கும் இடையிலான நட்பு ரீதியிலான உறவை வைத்து, 15பேர்ச்சுக்கும் அதிகாமான காணிகளை பெற்றுக்கொண்டோம். ஆனால் இன்று, தோட்டத் தொழிலாளர்களுக்கான காணி, ஏழு பேச்சர் என மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

“இன்றைய காலகட்டத்தில், ஏழு பேச்சஸ் காணியை வைத்துக்கொண்டு எதுவும் செய்துவிட முடியாது. இன்று ஒரு குடும்பத்தில் 2,3 பிள்ளைகள் இருக்கின்ற போது, அவர்களுக்கு வீடுகளைக் கட்டுவதற்கு மேலதிக நிலத்தை எங்குச் சென்று பெற்றுக்கொள்வது?

“இதுபோன்ற நேரத்தில்தான், புதிய முறையான தேர்தல் முறை ஒன்று கொண்டு வரபட்டுள்ளது. குறித்தத் தொகுதிக்கு யார் நியமிக்கப்பட்டிருக்கிறோ அந்த நபர்தான் குறிப்பிட்ட பகுதியில் அபிவிருத்தி முதல் அனர்த்தம் வரையான வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்” எனவும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .