2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கெர்க்கஸ்வோல்டில் “ஒருவரையாவது தெரிவு செய்யுங்கள்”

Editorial   / 2017 டிசெம்பர் 29 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதிஸ்

“எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், பொகவந்தலாவை கெர்க்கஸ்வோல்ட் 319ஜி கிராமசேவகர் பிரிவிலிருந்து, உறுப்பினர் ஒருவரையாவது தெரிவுச்செய்ய வேண்டும்” என்று, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் சுப்பையா கமலதாசன் கோரியுள்ளார்.

பொகவந்தலாவை கெர்க்கஸ்வோல்ட் மேற்பிரிவு தோட்டத்தில், புதன்கிழமை (27) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்,

“பொகவந்தலாவை, கெர்க்கஸ்வோல்ட் 319ஜி பிரிவே, இலங்கையில் மிக பெரிய கிராமசேவகர் பிரிவாகும். ஆனால் இந்தக் கிராமசேவகர் பிரிவிலிருந்து, இதுவரை ஓர் உறுப்பினர்கூட தெரிவாகவில்லை.

“எனவே, இம்முறை இடம்பெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கூட்டணி சார்பாக நானும், சேவல் சின்னத்தில் பெண்ணொருவரும் போட்டியிடுகிறோம்.

“அமைச்சர் பழனி திகாம்பரத்தின் பிரத்தியேக உதவியாளராக, நான் கடமையாற்றி வந்தேன். பொகவந்தலாவை கெர்க்கஸ்வோல்ட் தோட்டப் பகுதிகளுக்கு, எமது அமைச்சர் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளார்.

“சாஞ்சிமலையில் இருந்து பொகவந்தலாவை, டின்சின் நகரம் வரையான வீதி, கடந்த காலங்களில் குண்டும் குழியுமாகக் காணப்பட்டது. இதனால் மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தனர். இவ்வீதியின் அவலநிலைத் தொடர்பில், அமைச்சர் திகாம்பரத்தின் கவனத்துக்குக் கொண்டுச் சென்றதைத் தொடர்ந்து, தற்போது காபர்ட் இடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான அபிவிருத்திகள் எதிர்வரும் காலங்களிலும் தொடர வேண்டும்.

'எனவே, எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
இந்தப் பகுதியில் அபிவிருத்திகளை முன்னெடுக்கக் கூடிய ஒருவரையாவது, உள்ளூராட்சிமன்றத்துக்கு தெரிவு செய்து, அனுப்ப வேண்டும்” என்று, அவர் கோரினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .