2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கேகாலை மாவட்ட பாடசாலைகளுக்கு காணி ஒதுக்கீடு

Editorial   / 2018 மே 28 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்

கேகாலை மாவட்டத்தில் 39 பாடசாலைகளுக்கு, தலா இரண்டு ஏக்கர் வீதம் காணியை ஒதுக்கீடு செய்வதற்கு, அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்துள்ளதெனத் தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், இந்த வாய்ப்பை, சப்ரகமுவ மாகாண சபை பயன்படுத்திக்கொண்டு, பெருந்தோட்டப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய முன்வர வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தார்.

“இந்த வாய்ப்பானது, நாங்கள் அரசியல் ரீதியாகப் பெற்றுக்கொண்ட வாய்ப்பாகும்” என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், பெருந்தோட்டப் பாடசாலைகளின் அபிவிருத்திக்கு, காணி இன்மை பெருந்தடையாகக் காணப்படுகிறது என்று கவலை தெரிவித்த அவர், பாடசாலைகளுக்குக் காணிகளைப் பெற்றுக்கொடுப்பது பெரும் பிரச்சினையாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனைக் கருத்திற்கொண்டு, கல்வி அமைச்சின் மூலம் தோட்டப் பாடசாலைகளுக்கு கட்டாயம் 2 ஏக்கர் காணி வழங்க வேண்டும் என்று, அமைச்சரவைப் பத்திரத்தைத் தாக்கல் செய்ததாகக் கூறிய அவர், இதற்கான அமைச்சரவை அங்கிகாரத்தை பெற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

இதற்கமைவாக, சுமார் 353 பாடசாலைகளுக்கு, இரண்டு ஏக்கர் காணியைப் பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதெனவும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .