2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கொட்டகலை மாணவர்கள் 21 பேருக்கு, திடீர் சுகயீனம்

Editorial   / 2019 மே 24 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.கணேசன், ஆ.ரமேஷ், ரஞ்சித் ராஜபக்ஷ

திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியில், தரம் 7 ஆங்கிலப் பிரிவில் கல்வி பயிலும் ஆண், பெண் மாணவர்கள் 21 பேர், இன்று (24) காலை, திடீரென சுகவீனமுற்ற நிலையில், கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வகுப்பறையில் கல்வி பயிலும் மாணவர்களின் கை மற்றும் முதுகுப் பகுதிகளில், அரிப்புடன் கூடிய கொப்புளங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்தே, இம்மாணவர்கள், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த பாடசாலையின் மேற்படி வகுப்பறை, பொதுச் சுகாதாரப் பரிசோதக அதிகாரிகளால், விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இக்கல்லூரி மாணவர்களை, தௌ்ளுப்பூச்சிகளே தாக்கியிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டிருந்த போதிலும், அங்கு அவ்வாறான நிலை ஏற்படவில்லை என கல்லூரியின் ஆசிரியர்கள் தெரிவித்தனர். அத்தோடு, மாணவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சம் கொண்ட போதிலும் அவ்வாறானதொரு நிலைமையும் இல்லை.

இவ்வாறிருக்க, இவ்வகுப்பறையில் மாத்திரம் கல்வி பயிலும் 21 மாணவர்களுக்கு, திடீரென இந்நிலைமை ஏற்பட்டமைக்கான காரணம், இதுவரை கண்டறியப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

ஆகையினால், பாதிக்கப்பட்ட மாணவர்களை, விசேட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தி, சுகயீனத்துக்கான காரணங்களைக் கண்டறிய, பாடசாலை அதிபர் உள்ளிட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .