2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கொத்மலை பகுதியில் 141 பேர் உணவின்றி பாதிப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 05 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

கொத்மலை உதவி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட நவ திஸ்பனை, மொச்சக்கொட்டை, கட்டுக்கலை ஆகிய மூன்று தோட்டங்களில் வசித்து வரும் 37 குடும்பங்களை சேர்ந்த 141 பேர் உண்பதற்கு உணவின்றி கீரைகளை அவித்து உண்ணும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று,பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

மகாவலி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட இம்மக்கள் தாம் வசிக்கும் சொந்த  வீடுகளுக்கு மாதாந்த வாடகை செலுத்தி வாழ்ந்து வருகின்றனர்.

சொந்த வீடு, நிரந்தர தொழில் வசதி இன்றி ஒதுக்கப்பட்ட மக்களாக வாழும் இவர்களில், 64 சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர்.

தினமும் கூலி தொழிலில் ஈடுப்பட்டு வாழ்க்கை  நடத்தி வரும் இம்மக்கள், ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு வேளை உணவின்றி பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவருகிறது.

மலையக அரசியல்வாதிகள் உட்பட நல்லுள்ளம் கொண்ட அமைப்புகள், செல்வந்தர்கள் தமது நிலையுணர்ந்து உணவு பொருள்;களை வழங்கி உதவி கரம் நீட்ட முன்வர வேண்டும் என்று, மேற்படி குடும்பங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த காலங்களில், தமக்கான வதிவிடம்,  நிரந்தர  தொழில், வாழ்வாதாரம் தொடர்பாக பல போராட்டங்களில் இங்குள்ள மக்கள்  ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அரசாங்கம் அறிவித்துள்ள நிவாரண  உணவு வகைகளையேனும் இம்மக்களுக்கு பெற்று கொடுக்க கொத்மலை பிரதேச செயலகமும் நடவடிக்கை  எடுக்க வேண்டும்  என கோரிக்கை விடுக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .